India - Location, Relief and Drainage | 10th Geography TNPSC Online Test
Learning Objectives
To understand the strategic importance of India’s absolute and relative location in the world
To know the distinct characteristics of major physiographic divisions of India
To compare the regions of Great Indian plains
To understand the drainage system of India
To differentiate the Himalayan and peninsular rivers
கற்றலின் நோக்கங்கள்
இந்தியாவின் அமைவிட முக்கியத்துவத்தைப்பற்றி புரிந்துகொள்ளல்
இந்தியாவின் முக்கிய தனித்துவப் பண்புகளைக் கொண்ட இயற்கையமைப்புப் பிரிவுகளைப் பற்றி அறிந்துகொள்ளல்
இந்திய பெரும் சமவெளிப் பகுதிகளை ஒப்பிடுதல்
இந்தியாவின் வடிகாலமைப்பு பற்றி புரிந்துகொள்ளல்
இமயமலையில் உருவாகும் ஆறுகள் மற்றும் தீபகற்ப ஆறுகளுக்கு இடையேயான வேற்றுமைகளைப் புரிந்துகொள்ளல்
SUMMARY
India has been physiographically divided into five divisions. They are Northern
Mountains, Northern Great Plains, The Plateau region, Coastal Plains and Islands.
Northern Mountains are classified into three divisions as Trans-Himalayas, Himalayas
and Eastern Himalayas.
Northern Great Plains are divided into four as Rajasthan Plains, Punjab-Haryana Plains,
Gangetic Plains and Brahmaputra Plains.
The Plateau region of India has two divisions namely the Central Highlands and the
Deccan Plateau.
Andaman and Nicobar Islands and Lakshadweep are the two major island groups of India.
The Drainage System of India is classified into the north Indian (Himalayan) and
Peninsular rivers.
Narmada, Tapti, Mahi and Sabarmathi rivers confluence with the Arabian Sea.
Mahanadi, Godavari, Krishna and Cauvery are the major east flowing rivers and drain
into Bay of Bengal.
பாடச்சுருக்கம்
இந்தியா 6 இயற்கைப் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன . அவை வடக்கு மலைகள் , வடபெரும் சமவெளிகள் , தீபகற்ப பீடபூமிகள் , பாலைவனம் , கடற்கரை சமவெளிகள் மற்றும் தீவுகள்
வடக்கு மலைகள் மூன்று பிரிவுகளை உள்ளடக்கியது . அவை டிரான்ஸ் இமயமலை , இமயமலை , பூர்வாஞ்சல் அல்லது கிழக்கு இமயமலைகள்
வடபெரும் சமவெளிகள் , இராஜஸ்தான் சமவெளி , பஞ்சாப் - ஹரியானா சமவெளி , கங்கை சமவெளி , பிரம்மபுத்திரா சமவெளி என நான்கு பிரிவுகளாக உள்ளன
தீபகற்ப பீடபூமி இரு பிரிவுகளை உள்ளடக்கியது .1 ) மத்திய உயர்நிலம் 2 ) தக்காண பீடபூமி அ
ந்தமான் நிக்கோபர் தீவுகள் மற்றும் இலட்சத் தீவுகள் இந்தியாவிலுள்ள இரண்டு பெரிய தீவுக் கூட்டங்கள்
இந்தியாவின் வடிகாலமைப்பு வடஇந்திய ஆறுகள் ( இமயமலை ஆறுகள் ) மற்றும் தீபகற்ப ஆறுகள் என இரு பிரிவுகளாக பிரிக்கப்படுகின்றன .
நர்மதை , தபதி , மாஹி மற்றும் சபர்மதி ஆறுகள் அரபிக்கடலில் கலக்கின்றன .
மகாநதி , கோதாவரி , கிருஷ்ணா மற்றும் காவிரி ஆறுகள் கிழக்கு நோக்கி பாய்ந்து வங்காள விரிகுடாவில் கலக்கின்றன .