Development Administration in Tamil Nadu - Social Transformation In Tamil Nadu Online Test
Learning Objectives
To acquire knowledge about the social transformation of modern Tamil Nadu
To know the different social reform movements in Tamil Nadu
To understand the ideas of the social reformers
SUMMARY
Nineteenth century India encountered a process of introspection among Indian intellectualsdue to the colonial intervention and the rise of rationalism. This led to the Indian renaissance.
In Tamil Nadu, the proliferation of the printing press acted as a catalyst for the publication andspread of secular ancient Tamil literature.
Tamil scholars in the nineteenth century worked hard to publish Tamil classics.
The transformation not only revived Tamil language and literature. It challenged the prevailingcaste hierarchy.
The Justice Party established in 1916 voiced the problems of non-Brahmin in the MadrasPresidency.
Periyar E.V. Ramasamy, the pioneer of the Self-Respect Movement, critiqued fundamentalismand promoted rationalism among people.
Ultimately, the rational ideas of Tamil Nadu became a model for constructive developments ofthe modern Indian state.
கற்றலின் நோக்கங்கள்
நவீனத் தமிழ்நாட்டின் சமூக மாற்றங்கள் குறித்த அறிவினைப் பெறுதல்
தமிழ்நாட்டின் பல்வேறு சமூக சீர்திருத்த இயக்கங்களை அறிதல்
சமூக சீர்திருத்தவாதிகளின் கருத்துக்களைப் புரிந்து கொள்ளல்
பாடச்சுருக்கம்
காலனியத்தின் தலையீட்டினாலும் பகுத்தறிவு இயக்கத்தின் எழுச்சியினாலும் இந்திய அறிவுஜீவிகளிடையே தன்னைத்தானே உள்ளாய்வு செய்து கொள்ளும் உள்முகச் சிந்தனைச் செயல்படுவதை பத்தொன்பதாம் நூற்றாண்டு இந்தியா எதிர்கொண்டது . இது இந்திய மறுமலர்ச்சிக்கு இட்டுச் சென்றது .
தமிழ்நாட்டில் , அச்சுக் கூடங்களின் வளர்ச்சி , பழம்பெரும் சமயச் சார்பற்ற தமிழ் இலக்கியங்கள் வெளியிடப்பட்டு பரவுவதற்கு செயலூக்கியாய் அமைந்தது .
பத்தொன்பதாம் நூற்றாண்டில் தமிழறிஞர்கள் தமிழ் செவ்வியல் இலக்கியங்களை வெளியிடுவதற்கு அயராது உழைத்தனர் .
இம்மாற்றம் தமிழ்மொழி , இலக்கியம் ஆகியவற்றுக்கு மட்டும் புத்தூக்கம் அளிக்கவில்லை . நடைமுறையிலிருந்த சாதிப்படிநிலைகளுக்குச் சவாலாக அமைந்தது .
1916 இல் நிறுவப் பெற்ற நீதிக்கட்சி , சென்னை மாகாணத்தில் இருந்த பிராமணர் அல்லாதவர்களின் பிரச்சனைகளுக்காகக் குரல் கொடுத்தது .
சுயமரியாதை இயக்கத்தின் முன்னோடியான பெரியார் ஈ.வெ. ராமசாமி , அடிப்படைவாதத்தின் நிறை குறைகளை மதிப்பிட்டார் .
இறுதியாகத் தமிழ் நாட்டின் பகுத்தறிவுச் சிந்தனைகள் நவீன இந்திய அரசின் ஆக்கபூர்வமான வளர்ச்சிகளுக்கு மாதிரியாய் அமைந்தது .