Unit 1- இந்திய அரசமைப்பு
1. இந்திய அரசமைப்புச் சட்ட வரைவுக் குழுத்தலைவர் யார்?
அ) இராஜேந்திர பிரசாத்
ஆ) சி.இராஜாஜி
இ) தேச் பகதூர் சப்புரு
ஈ) பி.ஆர். அம்பேத்கர்
2. இந்தியாவைப் பொறுத்த வரை நாடாளுமன்ற அரசாட்சியில் கீழ்க்காணும் கோட்பாடுகளில் எது பின்பற்றப்படுகிறது?
1) அமைச்சரவை உறுப்பினர்கள் அனைவரும் நாடா ளுமன்ற உறுப்பினர்கள் ஆவார்
2) நாடாளுமன்றத்தின் நம்பிக்கை நீடிக்கும் வரை அமைச்சர்கள் பதவி வகிப்பர்.
3) அமைச்சரவை அரசின் தலைவரால் தலைமை தாங்கப்படுகிறது.
கீழ்க்கண்ட குறிகளைப் பயன்படுத்தி சரியான விடையைத் தேர்ந்தெடு
அ) 1,2 மட்டும்
ஆ) 3 மட்டும்
இ) 2, 3 மட்டும்
ஈ) 1,2,3
3. அரசமைப்பை இறுதிப்படுத்த அரசமைப்பு நிர்ணயசபை எவ்வளவு காலம் எடுத்துக்கொண்டது?
அ) 1949 சுமார் ஆறு மாதங்கள்
ஆ) 1947 ஆகஸ்ட் 15 முதல் சுமார் இரண்டு ஆண்டுகள்
இ) 1948 நவம்பர் 26 முதல் சரியாக ஒரு ஆண்டு
ஈ) 1946 டிசம்பர் 9 முதல் சுமார் மூன்று ஆண்டுகள்.
4. மதராஸ் மாநிலம் எப்போது தமிழ்நாடு என பெயர் மாற்றம் பெற்றது?
அ) 1968
ஆ)1971
இ) 1969
ஈ) 1970
5. இந்தியா ஒரு இறையாண்மை, சமதர்மம், மதசார்பின்மை, மக்களாட்சி, குடியரசு நாடு என்று கூறும் அரசமைப்பின் பாகம் ஏது?
அ) அடிப்படை உரிமை
ஆ) ஆற்றுக்கொள்கை வழிகாட்டுதல்
இ) முகப்புரை
ஈ) அடிப்படைக் கடமைகள்
6. முகப்புரையில் இடம் பெறும் ‘நாம்‘என்னும் சொல் எதைக் குறிக்கிறது?
அ) இந்திய அரசு
ஆ) உச்ச நீதிமன்றம்
இ) நாடாளுமன்றம்
ஈ) இந்திய மக்கள்
7. கீழ்க்காணும் சொற்கள் முகப்புரையில் எந்த வரிசையில் இடம்பெற்றுள்ளன?
1. மக்களாட்சி
2. சமதர்மம்
3. இறையாண்மை
4. மதசார்பின்மை
5. குடியரசு
அ) 3,2,4,1,5
ஆ) 2,3,4,1,5
இ) 3,2,1,4,5
ஈ) 3,1,2,5,4
8. மாநிலங்களவை உறுப்பினர்களின் எண்ணிக்கை _______
அ) 250
ஆ) 235
இ) 240
ஈ) 245
9. அரசமைப்பில் தரப்படாத நிறுவனம் எது?
அ) நிதிஆணையம்
ஆ) நித்தி ஆயோக்
இ) ஒன்றிய அரசுப் பணியாளர் தேர்வாணையம்
ஈ) தேர்தல் ஆணையம்
10. இந்திய அரசமைப்பு நிர்ணயச்சபை நடைபெற்ற காலம்
அ) 9 ஆகஸ்ட் 1946 – 24 ஜனவரி 1950
ஆ) 10 டிசம்பர் 1945-10 மார்ச் 1950
இ) 9 டிசம்பர் 1946-24 ஜனவரி 1950
ஈ) 15 ஆகஸ்ட் 1945- 10 மார்ச் 1950
11. மேலவை எவ்வாறு அழைக்கப்படுகிறது?
அ) இந்தியக் குழு
ஆ) மாநிலங்கள் குழு
இ) மாநிலங்களின் ஒன்றியம்
ஈ) மாநிலங்களவை
12. இந்திய அரசமைப்பு உறுப்பு ________ன் கீழ் ஆங்கிலோ இந்திய சமுதாயத்தைச் சேர்ந்த _________ நியமன உறுப்பினராக ஆளுநர் நியமிக்கிறார்.
அ) உறுப்பு 333 - ஒரு உறுப்பினர்கள்
ஆ) உறுப்பு 283 – இரு உறுப்பினர்கள்
இ) உறுப்பு 383 – ஒரு உறுப்பினர்கள்
ஈ) உறுப்பு 343 - இரு உறுப்பினர்கள்
13. தமிழ்நாடு மாநிலச் சட்டமன்றத்தின் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்க ளின் எண்ணிக்கை
அ) 239
ஆ) 234
இ) 250
ஈ) 350
14. கூற்று: 42 வது அரசமைப்புத் திருத்தச்சட்டம் ஒரு ‘குறு அரசமைப்பு’ என்று குறிப்பிடப்படுகிறது
காரணம்: அதிகமான விதிகளை கொண்டு ஒருங்கிணைக்கப்பட்ட திருத்தச்சட்டம்.
அ) கூற்றும், காரணமும் சரியானவைகள் ஆகும். காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமாகும்.
ஆ) கூற்றும் காரணமும் சரியானவைகளாகும். ஆனால் காரணம் கூற்றை சரியாக
விளக்கவில்லை.
இ) கூற்று சரி ஆனால் காரணம் தவறு.
ஈ) கூற்று தவறு ஆனால் காரணம் சரி.
15. கூற்று: இந்திய அரசமைப்பு மிக நெகிழ்வுத் தன்மை கொண்டது. .
காரணம்: இதுவரை அரசமைப்பு 100 முறைக்கு மேல் திருத்தப்பட்டுள்ளது.
அ) கூற்றும், காரணமும் சரியானவைகள் ஆகும். காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமாகும்.
ஆ) கூற்றும் காரணமும் சரியானவை களாகும். ஆனால் காரணம் கூற்றை சரியாக விளக்கவில்லை.
இ) கூற்று சரி ஆனால் காரணம் தவறு.
ஈ) கூற்று தவறு ஆனால் காரணம் சரி.